திருமண வாழ்த்து
Friend கல்யாணம்னா
எல்லா
Friends -ம்
சேர்ந்து
வாழ்த்து Card
அடிக்கிறதும்.,
அதுல சாக்லட்
பின் பண்ணி
கல்யாணத்துக்கு வர்றவங்களுக்கு
கொடுக்கிறதும்.,
அதை வாங்கினவங்க
சாக்லட்டை மட்டும் சாப்பிட்டுட்டு.,
வாழ்த்தை கீழே போட்டுடறதும்.,
அந்த
வாழ்த்து எல்லோர் கால்லேயும்
மிதிபடறதும்.,
சாதரணமா எல்லா
கல்யாணத்துலயும் நடக்குது..,
ஆனா., எங்க Friend
கல்யாணத்துல
அப்படி நடக்கக்கூடாதுன்னு
முடிவு பண்ணினோம்..
இனிப்பை விட.,
இனிப்பான வாழ்த்து அடிச்சா..!
அப்படி உருவானதுதான் இந்த வாழ்த்து..
**********************************************
நண்பா..,
இன்னிக்கு உனக்கு கண்ணாலம்.,
ஜோடி பொருத்தம் Super மெய்யாலும்.,
கண்ணாலத்துக்கு பின்னாலும்.,
அன்பா இருக்கணும் எந்நாளும்.,
புதுசா எதை நீ செஞ்சாலும்.,
வீட்ல கேட்டுக்க பெரும்பாலும்.,
16 பெத்துக்க பெரியவங்க சொன்னாலும்.,
முக்கோணத்தை மறந்துடாதே ஒரு நாளும்..
**********************************************
தங்காச்சி.,
சிக்கனமா குடும்பம் நடத்தணும்.,
சிரிச்சிக்கிட்டே எப்பவும் இருக்கணும்.
மாமியார் மெச்ச நடக்கணும்.,
மாமனாருக்கு மகளா இருக்கணும்.
சீரியல் பார்க்கிறதை தவிர்க்கணும்.,
சின்சியரா நியூஸ் மட்டும் பார்க்கணும்.
விட்டு கொடுத்து போகணும்.,
தட்டி கொடுத்து வாழணும்.