
அமெரிக்க அதிபர் ஒபாமா - ( சிறு குறிப்பு )
இன்னிய தேதியில உலகத்துக்கே
கைப்புள்ள இவருதான்.
காறி துப்பினாலும் காலர தூக்கி
விட்டுக்கற மனுஷன் .
இவருக்கு முன்னாடி இருந்தவரை
செருப்பால அடிச்சாங்க.,
அதை பத்தி நாம இப்போ பேச வேண்டாம்..!
" ஒரே நாள்ல எல்லாத்தையும் மாத்திடுவேன்னு
பீலா விட்டு எப்படியோ அதிபர் ஆயிட்டாரு.."
( ஆனா அதுக்கு அப்புறம் கிளைமேட் கூட
மாறலைங்கிறது வேற விஷயம்..)
போன வருஷம் மிக சிறந்த காமெடி
இவரு நோபல் பரிசு வாங்கினது தான்..!
( வர வர நோபல் பரிசுகூட கலைமாமணி விருது
மாதிரி ஆயிடுச்சி..)
பொதுவாவே
அமெரிக்க அதிபர்கள்
அவங்க இமேஜ் குறைஞ்சா.,
உடனே ராக்கெட் விடுவாங்க.,
இல்ல
எதாவது இளிச்சவாய் நாடா
பார்த்து சண்டைக்கு போவாங்க..
ஆனா
இப்போ அப்படி எதுவும் பண்ண முடியாது..!
பட்ஜெட் உதைக்கும்..,
நாம பணம் போட்டா.,நம்ம நாட்டு பேங்க்.,
நமக்கு வட்டி தருவாங்க..
ஆனா.,
அமெரிக்காவுல பணம் போட்டவங்களுக்குஅந்த ஊரு பேங்க் அல்வாதான் தருது..
அதனால தான் சொல்லுறேன்..,
ஏற்கனவே பிச்சை எடுக்குற
நிலைமைக்கு வந்துடீங்க..
திருந்த முயற்சி பண்ணுங்க...