கடவுளும் காமெடி பண்றாரு...
காமெடி 1:கடவுள் புல் மப்பில் இருக்கும் மனிதன் முன் தோன்றுகிறார்.
கடவுள் : மனிதா நான் கடவுள் வந்திருக்கிறேன். சீட்டுகுலுக்கிப் பார்த்ததில் உன்பெயர் வந்தது. உனக்கு என்ன வரம்வேண்டும் கேள் தருகிறேன்?
மனிதன் : இன்னாது கடவுளா... சரக்கு அடிச்சது நானு உனக்கு மப்பு ஏறிடிச்சா...சரி கடவுள்னே வச்சுக்குவோம் சீட்டு குலுக்கி பார்க்கிறதுக்கு நீங்க சீட்டு கம்பெனியா நடத்துறீங்க?
கடவுள் : அப்படியில்லை மனிதா... இப்ப யாரும் தவம் பண்றது இல்லை, பண்றவங்களுக்கும் தவத்தை கலைக்க ரம்பாவோ, ஊர்வசியோ வருவாங்க அவங்களை கரெக்ட் பண்ணிறலான்னு அதுக்காகவே தவம் பண்றாய்ங்க. எங்களுக்கு எங்க டார்க்கெட் கம்ளிட் பண்ணவேண்டியிருக்கு.. இப்ப உனக்கு வரம் வேண்டுமா? வேண்டாமா?
மனிதன் : வரம் வேணும் சாமி அதுக்கு முன்னாடி ஒரு டவுட் கிளியர் பண்ணுங்க.
கடவுள் : டவுட்டா??? எக்குத்தப்பா ஏதாச்சு கேட்டுருவானோ? சரி கேளு.
மனிதன் : இத்தினி வருசமா உயிரோட இருக்கியே...உனக்கு வயசே ஆகாதா? அப்படியே இருக்க எங்கூரு கமல் மாரியே...
கடவுள் : மனிதா பூமியில் ஐந்து நிமிடம் என்பது எங்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம், அதனால் தான் அப்படி.
மனிதன் : அடங்கொய்யால... அப்டியா... அப்ப எங்கூர்ல பத்து பைசா உங்கூர்ல எவ்ளோ?
கடவுள் : உங்கூரு பத்து பைசா எங்களுக்கு நூறுகோடிக்கு சமம்.
மனிதன் : சரிசாமி...நான் பேசுனதெல்லாம் மனசுல வச்காதே... ஒரு பத்து பைசா கடனா கொடுத்து இடத்தை காலிபண்ணு
கடவுள் : (தண்ணிபோட்டாலும் இதுல மட்டும் தெளிவாத்தான் இருக்ககாம்யா...கடைசில மனசப்பய புத்தியை எங்கிட்டேயே காட்டிட்டானே...மவனே நம்மகிட்டேயேவா...)
சரி தர்றேன் ஒரு ஐந்து நிமிடம் கழித்து வா....
----------------------------------------------------------------------------------
காமெடி 2:
களம் : மேலோகம்சீன்: ஜட்ஜ்மென்ட் டே கதாபாத்திரங்கள் : கடவுள், சித்திரகுப்தன், தீர்ப்புக்காக காத்திருக்கும் இறந்த மனிதர்கள்.கடவுள் : என்ன சித்திரகுப்தா எல்லாரும் வந்துவிட்டார்களா?
சி.கு : ஆம் சுவாமி, அற்ப மானிடர்கள் காத்திருக்கிறார்கள்.
கடவுள்: ஒவ்வொருவரையாக வரச்சொல்.
(முதல் மனிதன் வருகிறான்)
கடவுள் : சித்திரகுப்தா இவன் ஆள் எப்படி?
சி.கு: இவன் ஒரு பக்கா மொள்ளமாரி சுவாமி.
கடவுள் : ஏய் மானிடா நீ எத்தனை திருமணம் செய்தாய்?
மனிதன்1 : ஒரே ஒரு திருமணம் தான் சுவாமி
கடவுள்: இவனை ஆர்டனரி சொர்க்கத்துக்கு அனுப்பு...நெக்ஸ்ட்
சி.குப்தன்: சுவாமி இவனும் பக்கா டுபாக்கூர் சுவாமி.
கடவுள் : ஏய் அற்ப பதரே நீ எத்தனை திருமணம் செய்தாய்?
மனிதன்2 : ரெண்டு சாமி
கடவுள் : இவனை ஸ்பெஷல் சொர்க்கத்துக்கு அனுப்பு. கூடவே ரம்பா ஊர்வசியும் இவனுடன் இருக்கச்சொல்.
(மனிதன்3 : ஆஹா... ஒண்ணு, ரெண்டுக்கே சொர்க்கமா, நமக்கு மூணாச்சே... இப்படின்னு முன்னாடி தெரிந்திருந்தா எப்பவே செத்துப்போயிருப்பனே..)
கடவுள் : மூன்றாவது மனிதனை வரச்சொல்.
சி.கு: சுவாமி இவன் ரொம்ப நல்லவன் சாமி...
கடவுள்: நீ எத்தனை திருமணம் செய்தாய் ?
மனிதன்3: நான் மூணு கண்ணாலம் பண்ணியிருக்கனுங்கோ? சாமி நமக்கு இந்த ஸ்பெஷல் சொர்க்கல்லாம் இல்லைன்னாலும் பரவால்ல சாமி, அட்ஜஸ் பன்னக்கிறேன்... எங்கூரு சில்க்ஸ்மிதா இங்கதான் இருப்பாங்க... எங்கூட அனுப்பினீங்கன்னா....
கடவுள்: அற்ப நரனே உனக்கு சொர்க்கம் கேட்குதா?? இவனை நரகத்திற்கு கூட்டிச்சென்று எண்ணைய் கொப்புரையில் போட்டு வாட்டுங்கள்...அப்பவாது புத்தி வரட்டும்.
மனிதன்3: சுவாமி இன்னாச்சு உங்களுக்கு...ஒண்ணு, ரெண்டுக்கே சொர்க்கம் குத்தீங்க...நானு மூணு சாமி...மூணு... அதுல எவ்வளவு கஷ்டம் இருக்குன்னு உங்களுக்கு தெரியாததா?
கடவுள்: பெண்களை எல்லாம் உள்ளே அனுப்புங்க... இவன் பார்வையே சரியில்லை,
அற்ப பதரே... ஒரு தப்பை ஒருதடவை பண்ணலாம், ரெண்டு தடவை பண்ணலாம்
நீ மூணு தடவை பண்ணிக்கிட்டு அதை பெருமையா வேற சொல்றியா...கொண்டுச்செல்லுங்கள் இவனை. அங்கே இருக்கும் பெண் பூதகணங்களை இவன் இருக்கும் இடத்தில் இருந்து மாற்றி ஆண் பூதகணங்களைப்போடுங்கள்... பாவி இங்கேயும் அவன் புத்தியை காண்பிச்சிறபோறான்.